பிரம்மரிஷி மலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ காகமுனி அன்னை சித்தர் ராஜகுமார் குருஜி,

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தில் உள்ள பிரம்மரிஷி மலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ காகமுனி அன்னை சித்தர் ராஜகுமார் குருஜி, அன்னை ரோகிணி ராஜகுமார் அவர்களின் அருளாசியுடன் 27.02.2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மலைமேல் சிவஜோதி ஏற்றப்பட்டு, அதை தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள அருள்மிகு காகன்னைஸ்வரர் திருக்கோவிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. 28.02.2014 வெள்ளி அன்று காலை கஜ பூஜை, கோபூஜை, அஸ்வபூஜை மற்றும் 210 சித்தர்கள் யாகம் நடைபெற்று இனிதே நிறைவடைந்தது.
இவ்விழாவில் சிங்கப்பூர் குருகடாக்க்ஷம் ஸ்ரீ நடராஜா அனந்தபாபா மற்றும் அவரது மெய்யன்பர்கள், சிங்கப்பூர் தொழிலதிபர் திரு.ரத்தினவேல், இலங்கை மாதாஜி வித்யா புவிச்சந்திரன், உதயன்  மற்றும் மெய்யன்பர்கள், மலேசியா சாந்தி மாதாஜி மற்றும் மெய்யன்பர்கள், திரைப்பட இசையமைப்பாளர் திரு. கங்கை அமரன் அவர்கள், நடிகர் திரு.ஜெய சூரியகாந்த்ஜி, தொழிலதிபர் திரு.P.T.ராஜன், திரு.S.கோவிந்தராஜன் சர்வஜன பரிவார் டிரஸ்ட், திரு.Dr.ராஜா சிதம்பரம் மற்றும் எளம்பலூர் கிராம பஞ்சாயத்து தலைவர் திரு.R.C.R.இராமசாமி அவர்களும், சிவனடியார்கள், ஆன்மீக தர்மவான்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் சாதுக்கள் மற்றும் முதியோர்களுக்கு வஸ்திரதானமும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனாவும் மற்றும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பிரம்மரிஷி மலை தவயோகி சுந்தர மகாலிங்கம், தவயோகி தவசிநாதன் மற்றும் மகா சித்தர்கள் டிரஸ்ட்மெய்யன்பர்கள் செய்திருந்தனர். 

Comments

Popular posts from this blog

GURU ANNAI SIDDHAR in malaysia thanneermalai murugan temple